மாநகராட்சி மேயர், துணை மேயர் சொல்வதை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் கேட்பதில்லை என்றும் மாநகராட்சிக்கு தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை மேயரிடமும் மாமன்ற உறுப்பினர்களிடமும் தகவல் தெரிவிக்காமல் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் தனிச்சையாக செயல்படுவதாகவும் மேயர், துணை மேயர் சொல்லக்கூடிய பணிகளை ஆணையரோ மாநகராட்சி அலுவலர்களோ அதிகாரிகளோ செய்வதில்லை என்றும் பகிரங்கமாக மேயர் இளமதி துணை மேயர் ராஜப்பா ஆகியோர் குற்றம் சாட்டினர்