கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள விஸ்கோஸ் ஆலை அருகே நோய்வாய்ப்பட்ட காட்டு யானை ஒன்று நடமாடி வருவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது அந்த தகவல் அடிப்படையில் அங்கு சென்று யானையை பார்வையிட்ட வனத்துறையினர் நோயால் பாதிக்கப்பட்ட யானைக்கு உணவு மூலம் மாத்திரைகளை கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்