இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 13 பேரை மார்ச் 6ஆம் தேதி புதன்கிழமை வெறி நாய் கடித்தது. இதனையடுத்து வெறி நாய் கடித்த 13 பேரும் முதல் உதவி சிகிச்சைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இதுகுறித்து பொதுமக்கள் இளையான்குடி பேரூராட்சி நிர்வாகத்திடம் அளித்த புகார் அடிப்படையில் 13 பேரை கடித்த வெறி நாய்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் தேடி வருகின்றனர்