பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் குடிபோதையில் ஒருவர் மாற்றுத்திறனாளியை கட்டையாலும், கையாளும் தாக்குவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர் மாற்றுத்திறனாளியை தாக்கிய போதை ஆசாமியை தடுத்தபோது போதை ஆசாமி காவலரை தாக்கி உடையை கிழிக்க முற்பட்டு தள்ளிவிட்டார். துரிதமாக செயல்பட்ட காவலர், மாற்றுத்திறனாளையும், தன்னையையும் தாக்கிய குடி போதை ஆசாமியை பிடித்து பழனி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்