காசிமேடு நாகூரார் தோட்டம் பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள கேன்சர் மருத்துவமனையில் இருந்து கழிவுகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விடப்படுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் அப்பகுதி மக்கள் காசிமேடு எண்ணூர் விரைவு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது