சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த ஒரு மாதமாக கடும் வெப்பம் நிலவிய நிலையில், இன்று மாலை திடீரென கனமழை பெய்தது. திருப்பத்தூர், திருக்களாப்பட்டி, கீழச்சிவல்பட்டி, எஸ்.எஸ்.கோட்டை, திருக்கோஷ்டியூர், நாச்சியாபுரம் பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. வாகன ஓட்டிகளும் உற்சாகமாக உள்ளனர்.