பாபநாசம்: விழுந்து விடுமோ ... அச்சப்பட்டுக் கொண்டே சாய்ந்து கிடக்கும் மின்மாற்றி கடந்து செல்லும் மெலட்டூர் பகுதி மக்கள்
தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே அன்னப்பன்பேட்டையில் இருந்து குண்டூர் சாத்தனூர் செல்லும் பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி வெகுவாக சாய்ந்து மக்களை அச்சப்படுத்தி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவேன் என பயமுறுத்தும் இந்த மின்மாற்றி உடனே மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.