சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள மேலநெட்டூர் கிராமத்தில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்கள், குறிப்பாக மாணவர்கள்,காலை நேரத்தில் பஸ்ஸே இல்லாமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையை கருத்தில் கொண்டு, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி அவர்களின் முயற்சியின்பேரில் இளையான்குடியிலிருந்து மதுரைக்கு செல்ல அரசு பேருந்து இயக்கம் ஏற்பாடாகியது.