தூத்துக்குடி: திருநெல்வேலி: ஆதிபராசக்தி நகர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரால் மக்கள் வெளியே வர முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து மிதமான இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அது மட்டுமல்லாமல் தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கக்கூடிய மழை நீரில் பாதாள சாக்கடை நீரும் கலந்து கருப்பு நிறத்தில் வீடுகளுக்கு உள்ளேயும் வீடுகளுக்கு வெளியேயும் தேங்கியுள்ளதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்கு உள்ளே முடங்கியுள்ளனர்