தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியில் அமைந்துள்ள ஆதிநாதர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நான்கு சென்டு இடம், சுமார் 1 முதல் 2 கோடி ரூபாய் பெரு மதிப்புள்ள இடமாக உள்ளது. இந்த நிலையில், அறங்காவலர் குழு தலைவர் கணேசன் உதவியோடு ஜெகதீஷ் என்பவர் கோவில் இடத்தில் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி இடத்தை அபகரிக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து கோவில் செயல் அலுவலர் சதீஷ் என்பவர் கட்டிடம் கட்டும் இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.