மேலூர்: மேலூரில் சிப்காட் வேண்டாம்- கும்மி அடித்து வழிபாடு நடத்தி பொதுமக்கள் எதிர்ப்பு- போலீசார் குவிப்பு
Melur, Madurai | Sep 26, 2025 மேலூர் அருகே மூன்று ஊராட்சி பகுதிகளை உள்ளடக்கி 278 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்கும் பணி நடந்து வருகிறது இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று கள்ளங்காடு சிவன் கோவில் முன்பு 200க்கும் மேற்பட்டோர் கும்மியடித்து சிப்காட்டுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தனர் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்