சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடசென்னை மாவட்டம் சார்பில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் சார் மற்றும் தேர்தல் ஆணையத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.