பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை கேட்டு அகில இந்திய விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் நடைபெறக்கூடிய முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். 100 நாள் வேலை அட்டை உள்ள அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.