பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வேகவதி ஆற்றின் தூர்வாரும் பணி இன்று தொடங்கப்பட்டது. திருப்பதிக்குன்றம் முதல் கீழ்கேட் வரை சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த பணி நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்கள், ஜேசிபி இயந்திரத்தை இயக்கி பணியைத் தொடங்கி வைத்தார்.