வேடசந்தூரை அடுத்த சித்தூரை சேர்ந்த ஆலம்மாள் இவரின் அலைபேசிக்கு மர்ம நபர் தொடர்பு கொண்டு மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி முன்பணமாக ரூ.2.50 லட்சம் தர வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து மர்ம நபரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.2.50 லட்சத்தை செலுத்தினார். அதன் பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆலம்மாள் S.P.யிடம் புகார் சைபர் கிரைம் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் கருப்பையா என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்