பிளாஸ்டிக் பைல்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து பொது மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறையில் நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் துறை இணைந்து நடத்திய பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பேரணியானது நகராட்சி பூங்காவில் இருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நகராட்சி பூங்காவில் நிறைவு பெற்றது