பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய பத்து நாள் விழாவில், உற்சவர் கற்பக விநாயகர் பல்வேறு வாகனங்களில் பவனி வந்தார். ஒன்பதாம் நாள் காலை பெரிய தேரில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகளுடன் தேரோட்டம் துவங்கியது. மாலை 5.15 மணிக்கு பக்தர்கள் தேரை இழுக்க, மழையில் நனைந்தபடி உற்சாகமாக இழுத்து, இரவு 7.45 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அருள் பெற்றனர்.