தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் பேரூராட்சித் தலைவரை பெட்ரோல் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் ஈடுபட்டவர்களை உடன் கைது செய்ய வலியுறுத்தி பாமக தொண்டர்கள் ஆடுதுறை மெயின் சாலையில் டயர்களை வரிசையாக கொளுத்தி மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆடுதுறை முழுவதும் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.