திண்டுக்கல்லில் நடைபெற்ற புத்தக திருவிழா நிறைவு பெற்றது. ஆலமரத்தின் வேர்களாக இருந்து பலரும் உதவி செய்தார்கள் என நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரவணன் பேசினார். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம், இலக்கிய களம் சார்பில் 12 -வது புத்தக திருவிழா, திண்டுக்கல் அங்கு விலாஸ் மைதானத்தில் 11 நாட்கள் நடந்தது. நேற்று நடந்த இறுதிநாள் புத்தக திருவிழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார்.