விருதுநகர் இந்து சமய அறநிலை துறைக் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ சொக்கநாத சுவாமி திருக்கோவில் 56வது ஆண்டு ஆவணிப் பெருந்திருவிழா கடைசி நாள் நேற்று இரவு அம்மன் கோவில் திடலில் சொக்கநாதசுவாமி பிரியா விடையுடன் பூதம் அலங்காரத்திலும் மீனாட்சியம்மன் அன்ன வாகனத்திலும் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர் .தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.