தேவகோட்டையில் 23.8.2025 அன்று “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நடைபெற்றது. அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஆய்வு செய்தனர். மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட திட்டங்களால் தரமான சிகிச்சை வழங்கப்படுகிறது. ரூ.3,000 மதிப்புள்ள 17 வகை சிறப்பு சேவைகள், புற்றுநோய் பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டன.240 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளும்,17 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டன.