திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் மூதாட்டி ராஜேஸ்வரி 80. மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இன்று மாலை வாடகை கொடுப்பதற்காக வட மாநில இளைஞர்கள் இருவர் மூதாட்டியின் வீட்டிற்கு சென்றபோது, மூதாட்டி வீட்டில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்ததைக் கண்டு காவல்துறைக்கு அளித்த தகவல் அளித்ததை தொடர்ந்து அவரை அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வீட்டில் சோதனை செய்ததில் பீரோவில் இருந்து நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது