ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பெல்லியப்பா நகர் பகுதி சேர்ந்தவர் கிருஷ்ணா .இவர் வாலாஜாப்பேட்டை பேருந்து நிலையம் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இந்த நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரை வாலாஜாப்பேட்டை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்