திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டு பகுதியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தையை தெரு நாய் கடித்ததில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் தெரு நாய்களை பிடிக்க வேண்டும் அதனால் அப்பகுதியில் உள்ள தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அப்பகுதி அதிமுக நகர்மன்ற உறுப்பினர் ஜன்னத்துல் பிர்தௌஸ் ராஜா முகமது தலைமையில் ,அப்பகுதியில் உள்ள தெருநாய்களை பிடிப்பதற்காக சென்றனர்.