அம்பத்தூர் அடுத்த சோழம்பேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் வயது 50 இவரது மனைவி சுமதி வயது 45 இவர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்,இன்று காலை செங்குன்றத்தில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர் அப்போது கள்ளிக்குப்பம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவர் கீழே விழுந்தனர் பின்னால் வந்த டாரஸ் லாரி ஏறியதில் காவலர் சுமதி உயிரிழந்தார், முருகன் சிகிச்சையில் உள்ளார்