சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் நந்தவனம் பராமரிப்பின்றி சிதிலமடைந்திருந்தது. கிராம மக்கள், ஜெயந்தன் லட்சுமி பிரியா தலைமையில், 300 பூக்கன்றுகளை நடவு செய்து நந்தவனத்தை செழிப்பாக்கினர். வில்வம், வன்னி, ருத்ராட்ச மரங்கள் உள்ளிட்ட பூக்களை நட்டனர். நிகழ்வில் தேவஸ்தான கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருணகிரி, பேரூராட்சி சேர்மன் கலந்து கொண்டனர்.