வேடசந்தூர் வடமதுரைரோடு கலைஞர் நகரில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டி (வயது 75). இவர் தனது மொபெட்டில் ஆத்துமேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது மாரம்பாடி பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவருக்கு தலையில் வெட்டுகாயமும், கை மற்றும் காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர்.வேடசந்தூர் போலீசார் விசாரணை.