விழுப்புரம் நாடாளுமன்ற விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமார் இரண்டாவது நாளாக இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். விசிகவின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று காலை மரக்காணம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாண்டி ரோடு பகுதியில் உள்ள டீக்கடையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் டீ போட்டுக் குடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.