தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கீழத்தாழனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது.இதில் மொத்தம் 11 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு விதமான போட்டிகளில் பங்கேற்ற நிலையில் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது