தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலை கோவில் உள்ளது இந்த மலைக்கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது முன்னதாக பல்வேறு திருத்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு நீர் ஊற்றினர் பின் கும்பநீரான புனித நீர் பக்தர்கள் மீது தீர்த்தவாரி நடைபெற்றது