திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குனிச்சி பகுதியில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் வாணிப கழகம் சார்பில் 3.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கு திறப்பு விழா இன்று மாவட்ட கலெக்டர் சிவ செளந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதனை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்