ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் திராவிட கழக பெண் நிர்வாகியான மீரா ஜெகதீசன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் இன்று பிற்பகல் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து கீ.வீரமணி உடன் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி 15 நிமிடங்களுக்கு மேலாக கலந்துரையாடினார்.