தாயமங்கலம் முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் திருவிழா கடைகள் அமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஏலம் நிர்ணயிக்கப்பட்டது. அதிகாரிகள் ஏல நிர்ணய தொகையை ரூ.1 கோடிக்கும் கீழ் குறைக்க வேண்டும் எனக் கூறி மார்ச் 1ம் தேதி மாலை சுமார் 5 மணி அளவில் கோயில் வளாகத்தில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் கோவில் முன்பாக அமர்ந்து கோரிக்கை விடுத்தனர்.