காஞ்சிபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சர் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். காஞ்சிபுரம் வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக கட்சியை தோற்றுவித்த வரம் முன்னாள் முதலமைச்சர் ஆன பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு வருகை தந்து அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.