திண்டுக்கல் ரயில் நிலையத்தில், தமிழ்நாடு காவலர் தினத்தையொட்டி -உறுதிமொழியை இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி உட்பட காவலர்கள் எடுத்துக்கொண்டனர். அதன்படி இந்திய அரசியல் அமைப்பின் பாலும், தமிழ்நாடு காவல்துறையின், உயரிய நோக்கங்களின்பாலும், நான் உண்மையான ஈடுபாடும், உளமார்ந்த பற்றும் கொண்டிருப்பேன், எந்தவித அச்சமோ, விருப்பு வெறுப்பின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும், நியாய உணர்வுடன் என் கடமை களை நிறைவேற்றுவேன் என்றும் உறுதியளிக்கிறேன் உறுதிமொழி.