இன்றும் மதியம் 12 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு கோவை ரேஸ் கோர்ஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக அங்கு வந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.