தூத்துக்குடி மாநகரின் WGC சாலையில் பிரபலமான நகைக் கடை எதிரே மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விகாஸ் (45) என்பவர் தங்க நகைகளை தர பரிசோதனை செய்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார். இங்கு அவரது அப்பா காலத்தில் இருந்து சுமார் 30 ஆண்டுகளாக இந்த தொழிலை அவர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவரது கடையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விட்டல் ஷிங்கடே என்பவரை வேலைக்கு சேர்த்துள்ளார்.