மடவாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்குபெற்ற நிலையில் முகாம் ஏற்பாட்டிற்காக பள்ளி அலுவலகத்தில் இருந்து மின்சாரம் முறைகேடாக எடுத்து உள்ளனர். அதோடு அதிக மின்சாரம் எடுத்த காரணத்தினால் சூடு தாங்காமல் மின்சாரம் அளவிடும் மீட்டர் வெடித்துள்ளது. மின்சார மீட்டர் வெடித்த காரணத்தினால் மர பலகை கருகி அந்த அலுவலகம் முழுவதும் புகைமூட்டமாக ஆனதை கண்டு அங்கு இருந்த ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து உள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது.