திருச்சியில் நாளை தவெக தலைவர் நடிகர் விஜய் பிரச்சார பயணத்தை துவங்குகிறார். திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இதற்காக திருச்சி மாவட்ட கால்வல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் இன்று மதியம் இரண்டு மணிக்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு தொடர்ந்து TVK பொதுச்செயலாளர் ஆனந்த் மத்திய பேருந்து நிலையம் அருகே கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.