ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் ஆறாம் தேதி தமிழ்நாடு காவலர் தினம் கடைபிடிக்கப்படுகிறது அந்த வகையில் இன்று காவலர் தினம் கடைபிடிக்கப்பட்டது நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட எஸ்பி ஸ்டாலின் கலந்து கொண்டு உயிரிழந்த போலீசாரின் நினைவு தொகுதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.