திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் விஷமங்கலம் ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கிளை கமிட்டி ஆலோசனை கூட்டம் தாலுக்கா தலைவர் சிங்காரம் தலைமையில் நடைபெற்றது. இதற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாமிநாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.