ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த பிஞ்சி பகுதியில் கடந்த சில தினங்களை தொடர் மழை காரணமாக சாலை ஓரம் இருந்த மின்கம்பம் திடீரென சாலையில் சாய்ந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மின்கம்பத்திற்கு ஏணியை முட்டுக்கொடுத்து நிறுத்தி வைத்தனர் எனினும் இருசக்கர வாகன ஓட்டுகள் ஆபத்தை உணராமல் மின்கம்பத்தின் நடுவே சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது