தருவைகுளம் வான்படை தளபதி அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்கு தந்தை வின்சென்ட் முன்னிலையில் பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. விழாவில் பங்குதந்தைகள், அருட்சகோதரிகள் மற்றும் ஊர் பங்கு மக்கள் பலர் கலந்து கொண்டனர்.