நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் உள்ளது இந்த கோவில்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் வழிபாடு சிறப்பு மிக்கது இங்கு அமைந்துள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் மற்றும் மஞ்சள் பொடி தூவி சிறப்பு வழிபாடு நடத்தினால் குழந்தை பாக்கியம் மற்றும் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். அதன்படி இன்று ஆவணி மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும் மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு நடத்தினார்