ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூர் பகுதியில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 5 மாதங்களுக்கு முன்பு விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகளுக்கு உரிய பில் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி சந்திரகலா அவர்களை நேரில் சந்தித்த விவசாயிகள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்