ராமநாதபுரம் ரோமன் சர்ச்சில் இருந்து அரண்மனை பகுதி வரை ரோடுஷோவாக வந்த எடப்பாடி பழனிச்சாமி பின்னர் அவருடைய பிரச்சார வாகனத்தில் நின்றவரு மக்கள் மத்தியில் பேசினார் தமிழகத்தில் நடப்பது திமுக கட்சி அல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி, மன்னர் ஆட்சி நடத்தி வருகின்றனர். திமுக ஓட்டுப்போட்ட மக்களை ஏமாற்றும் கட்சி, உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வராகலாம் என ஆசை உள்ளது. உதயநிதி ஸ்டாலினால் முதல்வராக முடியாது.2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்கும் என்றார்.