கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது ஆனால் கண்ணாடியில் சுத்தியல் விழுந்து சேதம் அடைந்ததாகவும் சுற்றுலா பயணிகள் அச்சமின்றி செல்லலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்திருந்தார் இந்த நிலையில் கண்ணாடி கீறல்கள் ஏற்பட்டதாக கூறப்பட்ட இடத்தை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் என்று ஆய்வு செய்தார்