தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் 3 புதிய பேருந்துகளின் சேவையினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அரியலூர் பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது. இதில் அரியலூரில் இருந்து சென்னை மாதவரத்திற்கு செல்லும் வகையில் ஒரு குளிர்சாதன வசதி கொண்ட பேருந்தினையும், சென்னை மற்றும் சேலத்திற்கு செல்லும் வகையிலான பேருந்துகளையும் தொடங்கி வைத்தார்.