சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக களமிறங்கும் வேட்பாளர் சேவியர் தாசை ஆதரித்து எம்.எல்.ஏ., செந்தில்நாதன் இளையான்குடி நகர் பகுதிகளான இளையான்குடி பஜார், புதூர், இடையவலசை ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக இளையான்குடி கிழக்கு, வடக்கு, தெற்கு ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று இளையான்குடி ஒன்றிய, நகர பகுதிகளில் மொத்தம் 69 இடங்களில் இன்று அதிமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.