காரைக்குடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான களப்பயணத்தை தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் துவக்கி வைத்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவுரையின்படி, 1,953 மாணவர்கள் உயர்கல்வி குறித்து அறிய இத்திட்டம் தொடங்கப்பட்டது. காரைக்குடியில் உள்ள கல்லூரிகளுக்கு 300 மாணவர்கள் சென்று படிப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்து அறிந்தனர். ஆய்வகங்கள், நூலகங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். இத்திட்டம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததாக ஆட்சியர் தெரிவித்தார்.